பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்க்கு நீதிமன்றம் அளித்த கொடூர தீர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்,கடந்த 2007ம் ஆண்டு நவம்பரில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பான வழக்கில் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் முஷரப் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது.
அவர் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் இருந்து வாக்குமூலம் அளித்து இருந்தாலும் அவருக்கு மரணதண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்.
மேலும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் உடல் தூக்கிலிடப்பட்ட பின் சாலையில் இழுத்து வந்து பொதுமக்கள் பார்வையில் தொங்கவிட வேண்டுமென அந்த நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த தீர்ப்பில் உள்ள 167பக்க அறிக்கையில் அவரை தூக்கிலிடப்பட்ட பின் அவரது உடலை இஸ்லாமாபாத்தின் சாலைகளில் இழுத்து வரப்பட்டு பொதுமக்கள் பார்வையில் மூன்று நாட்களுக்கு தொங்கவிடப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது இது பாகிஸ்தான் சட்டத்தில் புதுவிதமான தீர்ப்பாக கருதப்படுகிறது.
மேலும் அவர் தண்டனைக்கு முன் இறந்தால் , இக்கொடூர தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப்பிரிவு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஷாரப் 40 வருடத்திற்கும் மேல் நாட்டிற்காக சேவையாற்றியுள்ளார் என்றும், அவர் ஒருபோதும் நாட்டிற்கு துரோகம் இழைத்திருக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் நீதிமன்ற தீர்ப்பு வேதனையளிப்பதாகவும், பாகிஸ்தான் குடியரசு சட்டவிதிகள் படி நீதி வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.