Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொழில் அதிபரை கரம் பிடித்த ஹன்சிகா….

தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில், புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று திருமணம் நடந்து முடிந்தது.

ஹன்சிகாவிற்கு கடந்த இரண்டாம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடந்தது. முதல் நாளில் மருதானி வைக்கும், நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலையில் மஞ்சள் வைக்கும் சடங்கு நடந்தது.

அதனை தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக அவர்களுக்கு திருமணம் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version