Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீச்சல் உடையில் கூச்சமே இல்லாமல் போஸ் கொடுத்த ஹன்சிகா.!! பரிதவித்து போன ரசிகர்கள்.!!

தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தற்போது, இவர் லீட் ரோலில் நடிக்கும் ‘மஹா’ என்ற படம் மட்டுமே உள்ளது. இது இவருடைய 50வது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகாவுக்கு தமிழில் வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். கல்யாணம் உள்ளிட்ட வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளுக்கு பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களை செய்வதுதான் அந்த நிறுவனம்.

இவர் ஏற்கனவே, யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இது போன்ற தொழில்களில் நடிகை ஹன்சிகா ஆர்வம் காட்டி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் நீச்சல் உடையணிந்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Exit mobile version