Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை மிஞ்சும் வகையில் அடுத்த பிரபலத்தின் திருமணம் 

Child Marriage Case

Child Marriage Case

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை மிஞ்சும் வகையில் அடுத்த பிரபலத்தின் திருமணம்

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் வணிக பங்குதாரருமான சோஹைல் கதுரியா உடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அஜித் ,விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நடிகை ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகள் அவர்களின் மத சடங்குகள்படி தொடங்கியுள்ளதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி உள்ளது. இவர்களது திருமணத்திற்காக 450 ஆண்டுகளுக்கு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையை புதுப்பித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hansika Motwani
Hansika Motwani

இதனை தொடர்ந்து டிசம்பர் 2ஆம் தேதி திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் தொடங்க இருப்பதாகவும், டிசம்பர் 3 தேதி மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்கள் நடைபெற இருப்பதாகவும், டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண ஒளிபரப்பு உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போலவே நடிகர் ஹன்சிகா தன்னுடைய திருமண ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு விற்று விட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திருமணத்தில் பல கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version