ரஜினிகாந்த உடன் கூட்டணி அமைக்க ஓபிஎஸ் செய்த சூட்சமம்!

0
128

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்த அன்றைய தினமே அவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய கருத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த நிலையிலே, ரஜினிகாந்த் அவருடைய பிறந்த நாள் அன்று முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து அவர் போட்ட இணையதள பதிவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

சுமார் பத்து தினங்களுக்கு முன்பே அறிக்கை விட்ட ரஜினிகாந்த் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிதாக கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கும் தேதி வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தன்னுடைய கட்சி எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக விரிவாக பேசி இருந்தார். அன்று தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பன்னீர்செல்வம் ரஜினி தொடங்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். ரஜினியின் கட்சியோடு கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக தலைமை பரிசீலனை செய்யும் என்ற ரீதியில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் விஷயத்தில் பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சானது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. இதுகுறித்து பன்னீர்செல்வம் செயல்பாடு ரஜினி கட்சிக்கு விளம்பரம் தேடித் தருவதாக இருக்கின்றது, என்று முதல்வரிடம் புகார் அளிக்கும் அளவிற்கு சென்று விட்டது இந்த விவகாரம். இந்த நிலையிலேயே கடந்த சனிக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஒரு நாள் முன்பாகவே அதாவது வெள்ளிக்கிழமை இரவே பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளராக இருக்கும் மாற்று கட்சியை சார்ந்த ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மற்ற கட்சியினர் கூட இவ்வாறு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கவில்லை ஆனாலும் பன்னீர்செல்வம் ரஜினிக்கு முதல்நாளே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே என்று தெரிவிக்கிறார்கள். எப்படியானாலும் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி முதல் சாதாரண அரசியல் கட்சி தலைவர்கள் வரை எல்லோரும் வாழ்த்து தெரிவிப்பார்கள் அன்றைய தினம் துணை முதல்வர் முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தால் அது பத்தோடு பதினொன்று ஆகி விடும்.

ஆகவேதான் முதல் நாளன்றே பன்னீர்செல்வம் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார், என்று சொல்லப்படுகின்றது. ரஜினிகாந்த் விஷயத்தில் பன்னீர்செல்வம் சுயமாக செயல்படுவதில்லை எனவும், அவரை யாரோ ஒரு நபர் இயக்கி வருகின்றார் எனவும், தெரிவிக்கிறார்கள். பன்னீர்செல்வம் மூலமாக ரஜினிகாந்த் அவர்களுடைய இமேஜை பெரிதுபடுத்தும் வகையில் திட்டமிட்டு இருக்கிறது என்று அதிமுகவின் மேல் இடமே இப்போது சந்தேகம் எழுப்பி இருக்கின்றது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பொருத்தவரையில், ரஜினிகாந்த் அவர்களை பெரிதாக எடுத்துக் கொண்டது போல காட்டிக் கொள்ள மறுக்கிறார். ஆனாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான பன்னீர் செல்வம் ரஜினியை மிகவும் பெரிதாக எடுத்துக் கொள்வது போல காட்சிப்படுத்த படுகின்றார்.

இதற்கெல்லாம் பின்னால் ரஜினிகாந்தை அரசியல் களத்தில் வலுப்படுத்தும் ஒரு திட்டம் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதாவது அதிமுகவின் தனிப்பட்ட நிலைபாடு என்பதை கடந்து பன்னீர்செல்வம் தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட்டை ரஜினி விவகாரத்தில் செயல்படுத்தி வருகிறார் என்பது இதன் மூலமாக தெரிய வருகின்றது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ரஜினிகாந்த் மற்றும் பன்னீர்செல்வம் இடையேயான நெருக்கம் கூட்டணி என்பதையும் கடந்து ரஜினிகாந்தை மிகப்பெரிய அளவிலான ஊடக வெளிச்சத்தில் வைத்திருக்க நடத்தப்படும் நாடகம் தான் இது என்பதில் சந்தேகம் கிடையாது.

உதாரணமாக ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கின்றது ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. ஆனாலும்கூட பன்னீர்செல்வம் தெரிவித்ததால் அவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. என தெரிவிக்கிறார்கள் .அன்று மாலை ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.