Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 ஆம் சீசனில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை தமிழ் பெண்ணாக செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் மொழியில் நம் அனைவரின் மனதையும் ஈர்த்தவர். சீசன் 1 ஓவியாவை போல சீசன் 3 இவர் மக்களிடம் வேகமாக பிரபலமாகி விட்டார்.

ஓவியாவை போல இவருக்கும் லாஸ்லியா ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் உருவானது. அந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களும் இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் லாஸ்லியா தற்போது நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் .இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லாஸ்லியாவிற்கு இன்று பிறந்தநாள் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் லாஸ்லியாவிற்கு வாழ்த்து மழை குவிந்து கொண்டு வருகிறது.

Exit mobile version