Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“Happy Birthday மாமா” “நீ எப்பவும் என் கூட இருப்ப”!

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த விஜய் டிவி பிரபலம் புகழ் மறைந்த காமெடியன் வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு உடலில் ஏற்பட்ட நோய் காரணமாக விஜய் டிவியில் புகழ்பெற்ற காமெடியன் வடிவேல் பாலாஜி உயிரிழந்தார். வடிவேல் பாலாஜி மற்றும் புகழ் இருவரும் பல்வேறு கெட்டப்களில் மக்களை மகிழ்வித்து வந்தனர்.புகழின் வெற்றிக்கு பின்னணியாக வடிவேல் பாலாஜி செய்த காரியங்களை ஒவ்வொரு மேடையிலும் புகழ் எடுத்துரைக்க தவறியதே இல்லை.
அந்த அளவிற்கு வடிவேல் பாலாஜி புகழுக்கு ஒரு முதுகெலும்பாக இருந்துள்ளார்.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் புகழ். புகழ் மற்றும் சிவாங்கியின் சேட்டைகளை பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் ஹாப்பி பர்த்டே மாமா ! நீ எப்பவும் என் கூட இருப்ப ! மக்களை நீ என்னைக்கும் ஹாப்பியா வைக்கணும் அப்படின்னு நீ ஆசைப்பட்டதை நான் நிறைவேற்றுவேன் மாமா மிஸ் யூ.
என்று பதிவிட்டிருந்தார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் மிஸ் யூ வடிவேல் பாலாஜி என்ற கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

Exit mobile version