தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்!

0
991

ஜோதிடத்தில் புனிதமான விஷயங்களுக்கெல்லாம் குருபகவான் தான் காரகம் ஆவார். குருபகவானை குறிப்பிடும் விதமாக தான் திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றில் தங்கத்தில் செய்யப்படுகின்றது. வேதம் ஓதும் அந்தணர்களுக்கு காரகர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. கணவனுடைய ஆயுள் நிலைத்து நிற்கவும், மனைவியின் மங்கள தன்மை நிலைப்பதற்க்காகவும் குருபகவானின் அருள் நிறைந்த திருமாங்கல்யம் அணியப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

கணவன் மனைவி உள்ளிட்ட இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம்பெற்று மனைவி குறிக்கும் சுக்கிரனும், கணவனை குறிக்கும் மங்களன் என்ற செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி அல்லது உச்சம் மூலத்திரிகோணம் உள்ளிட்ட இடங்களில் பலம் மற்றும் திக்பலம் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தில் தொடர்பு கொண்டிருக்க இயலாது. ஏழாமிடம் சுத்தமாக இருப்பது நன்மை தரும் அதோடு ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுரர்களுடன் ஒன்றிணைந்து குடும்பம் மற்றும் சுகம் களத்திரம் ஆயுள் மற்றும் மாங்கல்யம் அயன சயன சுகம் உள்ளிட்ட வீடுகளில் தொடர்பு இருக்கக் கூடாது.

லக்கினம் குடும்பம் களத்திரம் ஆயுள் மற்றும் மாங்கல்யம் அதாவது ௧ 1,2 7 8 ஆகிய இடங்களில் சர்ப கிரகங்களான ராகு மற்றும் கேது தொடர்பு இருக்கக்கூடாது. பலமிழந்த நீச சந்திரன் 6 மற்றும் 8வது வீடுகளில் தொடராமல் இருப்பது நல்லது அசுப கிரகங்கள் உச்சம் பெற்று ஏழாம் இடத்தில் நிற்க இயலாது.

செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், சனி உள்ளிட்ட கிரகங்கள் சேர்க்கை பெற்று 7 மற்றும் 8ஆம் வீடுகளில் இருக்கக்கூடாது. 2 மற்றும் 7 ஆம் இடங்களில் மற்றும் அதன் அதிபதியுடன் தொடர்புகள் கொண்டிருக்கக்கூடாது அதோடு இந்த பொருத்தங்களுடன் சேர்ந்து ரஜ்ஜு பொருத்தம் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.