ஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! 

0
148
Happy News Famous Mariamman Temple Festival!! Tomorrow is a local holiday for this district!!

ஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! 

புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் அமைந்துள்ளது. எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவில் தான் பெரியது. மேலும் இது எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டு பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பெரும் திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும். மேலும் இந்த திருவிழாவின் போது கோட்டை பெருமாள் என்று அழைக்கப்படும் அழகிரி நாத சுவாமி திருக்கோவிலில் இருந்து அவரின் தங்கையான கோட்டை மாரியம்மன் க்கு சீர் வரிசைகள் இன்றளவும் கொண்டு வரப்படுகிறது. இது தொன்று தொட்டு நடைபெற்று வரும் அற்புத நிகழ்ச்சியாகும்.

மேலும் இந்த பெரிய திருவிழாவில் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கூறியிருப்பதாவது,

சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 09:08:2023 நாளை புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இன் கீழே வராது என்பதால் அன்றைய தினம் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட சில பணியாளர்களோடு கட்டாயம் செயல்படும்.

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 02.09.2023 என்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.