Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே ஹேப்பி நியூஸ்!! இனி வங்கி சேவை 24 மணி நேரமும்!! வங்கிகளுக்கு விடுமுறையே கிடையாது!!

மக்களே ஹேப்பி நியூஸ்!! இனி வங்கி சேவை 24 மணி நேரமும்!! வங்கிகளுக்கு விடுமுறையே கிடையாது!!

இந்தியாவின் பொது துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.இந்த எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.இதனால் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சலுகையை அறிவித்துள்ளது.அதாவது இனி பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வங்கி சேவையை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகம்படுத்தி உள்ளது.

அதாவது வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் வங்கி சேவையை பெற இலவச கட்டணமில்லா எண்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து எஸ்பிஐ தன்னுடைய twitter பதிவில், வாடிக்கையாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டே வங்கி சேவை பெறுவதற்கு 18001234 மற்றும் 18002100 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்வதன் மூலமாக வங்கியின் சிறப்பு வசதிகளை வாரத்தில் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் பெறலாம். மேலும் இந்த எண்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கு இருப்பையும் சரிபார்த்துக் கொள்ளலாம் எஸ்பிஐ தனது ட்விட்டர் என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version