Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தபால் துறையில் போஸ்ட்மேன், எம்டிஎஸ் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் விரைவில் வெளியிட உள்ளது. தற்பொழுது இதற்கான தகவல்கள் மட்டும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன்படி, அஞ்சல் அலுவலக MTS ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்ச வயது 40 வயது வரை இருக்க வேண்டும்,

இந்திய தபால் துறையில் எம்டிஎஸ் மற்றும் பிற பதவிகளுக்கான தகுதியை பூர்த்தி செய்யும் நபர், இந்த காலியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

 

இந்தியா போஸ்டில் உள்ள காலி பணியிடங்களுக்கான விவரங்கள் :-

 

✓ தபால்காரர் – 585 காலியிடங்கள்

✓ அஞ்சல் காவலர் – 3 காலியிடங்கள்

✓ அஞ்சல் உதவியாளர் – 597 காலியிடங்கள்

✓ வரிசையாக்க உதவியாளர் – 143 காலியிடங்கள்

✓ மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) – 570 காலியிடங்கள்

 

விண்ணப்பங்களுக்கான கட்டண விவரங்கள் மற்றும் சேர்க்கப்பட வேண்டிய ஆவணங்கள் :-

 

✓ கல்வித் தகுதிச் சான்றிதழ்

✓ மதிப்பெண் பட்டியல்

✓ ஆதார் அட்டை

✓ மின்னஞ்சல் ஐடி

✓ மொபைல் எண்

✓ பாஸ்போர்ட் அளவு

 

✓ விண்ணப்பக் கட்டணம்

பொது / OBC / EWS : 100/-

SC / ST : 100/-

PH / மற்ற 100/-

 

Exit mobile version