ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்?

0
261
Happy news for Ayyappa devotees! Airport at Sabarimala soon?

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்?

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து  கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில்.

கடந்த மண்டல மகர விளக்க பூஜையொட்டி  ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். மேலும் மாதந்தோறும் சிறப்பு பூஜைக்காக ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் அன்டோ  அந்தோணி சபரிமலை விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டில் கேரளா மாநிலம் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சபரிமலை அருகே உள்ள எருமேலி பகுதியில் விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. அதற்கான சாத்திய கூறுகள் ஆய்வுகள் நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கூறினார்.

மேலும் விமான நிலையம் அமைக்க பாதுகாப்பு அமைச்சகத்தின்   அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். அடுத்ததாக சுற்றுச்சூழல் அனுமதிக்காக காத்திருக்கின்றோம் என்றும் புதிய விமான நிலையம் அமைவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தை கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் ஆய்வு செய்து வருகின்றது என தெரிவித்தார். இந்த புதிய விமான நிலைய கட்டுமானத்தால் 150 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள திருவனந்தபுரம் கொச்சி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்து அதன் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சபரிமலையில் விமான நிலையம் அமைக்க 2300 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கான செலவு சுமார் ரூம் 4000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய விமான நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டையம், ஆலப்புழா ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்களை பயனடைவார்கள். அதுபோல தமிழ்நாட்டின் சில மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இதன் மூலம் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.