ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!!
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்போது தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் களை கட்டும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட மாநிலங்களில் இருந்து மாலையிட்டு ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருவதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் வழியாக சபரிமலை ஆலயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனை பரிசீலித்த தென்னக ரயில்வே முதன்முறையாக காரைக்குடியில் இருந்து, விருதுநகர் ராஜபாளையம் வழியாக எர்ணாகுளத்திற்கு சிறப்புக் கட்டண அடிப்படையில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
எர்ணாகுளம் செல்லும் இந்த சிறப்புக் கட்டண சிறப்பு ரயிலானது வருகின்ற நவம்பர் மாதம் 30-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை அன்று இயக்கப்பட உள்ளது. இதையடுத்து மீண்டும் எர்ணாகுளத்தில் இருந்து எர்ணாகுளம் காரைக்குடி (வ.எண்.06019) சிறப்பு ரயிலானது மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளத்தில் இருந்து அதிகாலை 4:45 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:27 மணிக்கு தென்காசியை சென்றடையும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மாலை 3:43 மணியளவில் விருதுநகர் ரயில் நிலையமும், இரவு 7 மணி அளவில் காரைக்குடியும் சென்றடைகிறது.
மேலும் இந்த சிறப்பு ரெயில் மறு மார்க்கமாக (வ.எண்.06020) காரைக்குடியில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.58 மணிக்கு விருதுநகருக்கும், நள்ளிரவு 3:50 மணிக்கு தென்காசியையும் சென்றடைகிறது. அடுத்து மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிறப்பு ரெயிலில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியை கொண்ட பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும், திருப்புனித்துறை, வைக்கம் ரோடு, எட்டுமானூர், கோட்டயம், செங்கனச்சரேி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம்,கொல்லம், குந்த்ரா, கொட்டாரக்கரை, அவனீசுவரம், புனலூர், தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில் கட்டணங்களை விட இந்த சிறப்பு ரெயிலில் 1.3 மடங்கு கட்டணமானது கூடுதலாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.