வங்கியில் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் கொடுக்கவிருக்கும் இன்ப அதிர்ச்சி!!
வங்கிகளில் கடன் வைத்திருக்கும் ஏழை எளியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவிருக்கும் தி.மு.க அரசு. கூட்டுறவு சங்க கடன்கள் மற்றும், நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது- மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பின், தேர்தல் அறிக்கையில் அவர் தெரிவித்த விவசாயக் கடன், கல்விக் கடன், கூட்டுறவுச் சங்கங்களில் வைத்துள்ள நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தார். தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் கேட்க்கும் அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு வழங்க தயாராக உள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்நோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டம் உள்ளது. அத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடந்திருக்கும் அனைத்து முறைகேடுகள் தொடர்பான அறிக்கையை வரும் 15ம் தேதிக்குள் அ அனைத்து மாவட்ட இணைப்பதிவாலர்களும் தர வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக் கடன்கள், கூட்டுறவு சங்க விவசாயக் கடன்கள் ஆகியவற்றை தள்ளுபடி செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது, குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது,