பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!! 

0
74
Happy news for general public!! Decreasing price of tomatoes!!

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!! 

தற்போது தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது உச்சத்தில் உள்ள ஒன்று என்றால் அது தக்காளியின் விலை தான். கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை தங்கத்தை விட விண்ணை முட்டி நின்றது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தக்காளியை வாங்கும் அளவை குறைத்தனர். அதற்கு மாற்று ஏற்பாடாக புளியை உணவில் சேர்த்துக் கொண்டனர். அதிலும் ஏழை மக்கள் தக்காளியை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கி விற்பனை செய்தது. ஆனாலும் தக்காளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதிக விலை உயர்வதும் பின்னர் விலை குறைவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரங்களில் தக்காளியின் விலை ஏறுமுகமாகவே விலை அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் மக்கள் கவலை அடைந்தனர். ஆனால் தற்போது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தக்காளியின் விலை ₹ 10 குறைந்து விற்கப்படுகிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.100 க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று பத்து ரூபாய் குறைந்து ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விலை குறைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதன்படி நவீன் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ரூ.22, உருளைக்கிழங்கு ரூபாய் 33 க்கும், சின்ன வெங்காயம் ரூபாய் 80 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற காய்கறி வகைகளான ஊட்டி கேரட் ரூ.60, பீன்ஸ் ரூபாய் 50, ஊட்டி பீட்ரூட் ரூபாய் 40-க்கும், வெண்டைக்காய் ரூபாய் 30-க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.