பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! சறுக்கிய தங்கம் விலை இன்றே தங்கம் வாங்க தங்கமான நாள்!!

0
260
Happy news for general public!! Get ahead of sliding gold prices today!!

இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூபாய் 70 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வந்தது. ஏழை எளிய மக்கள் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை உச்சத்தில் சென்றது. அதிலும் சென்ற வாரம் அதிகபட்சமாக ஒரு சவரன் ரூபாய் 56,960 க்கு விற்பனையாகி பொதுமக்களுக்கு உச்சபட்ச அதிர்ச்சியை வரவைத்தது.

அதன்பின்னர் எந்த மாற்றமும் நிகழாத சூழ்நிலையில் இந்த வாரம் தொடங்கியதில் சற்று தங்கத்தின் விலை இறங்குமுகமாக காணப்பட்டது. கடந்த இரு தினங்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை  அதிரடியாக  ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து  56, 740க்கும்,  கிராமிற்கு ரூ.70 குறைந்து ₹7,030 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.59880 -க்கும், ஒரு கிராம் ரூ.7485 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.100 க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ  ரூபாய் ஒரு லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனுடன் 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.46,480 க்கும்,கிராம் ரூ.5810 -க்கும் இன்றைய தேதியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு நகைப் பிரியர்களையும், அடுத்த மாதம் ஐப்பசியில் திருமணம் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் சற்று ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகமாக அதிகரித்து வந்த தங்கம் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.