மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!!

0
182
Happy news for metro commuters!! Tickets via WhatsApp!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்!!

சென்னையில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. கூட்ட நெரிசலுக்காகவும், பயண நேரத்தை குறைக்கவும் இந்த மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதில் தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், தற்போது பயண அட்டை முறை மற்றும் கியூ ஆர் கோடு மூலமாக டிக்கெட்டை எடுத்து கொள்கிறார்கள்.  இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

அதாவது வாட்ஸ் அப் மூலமாக தங்களது டிக்கெட்டை எடுத்து கொள்ளலாம். இதற்காக ஒரு பொது எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இந்த எண்ணை பயணிகள் பதிவு செய்து கொண்டு, அதன் மூலமாக டிக்கெட் எடுக்கலாம். இதற்கான கட்டணத்தை Whats up pay, G pay, Phone pe, Net Banking மூலமாக செலுத்தலாம்.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியோ அல்லது புறப்படும் போதோ நாம் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். மெட்ரோ ரயில் கொடுக்கும் எண்ணிற்கு புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை அனுப்பி, பிறகு கட்டணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.

மேலும் உங்களுடைய வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு கியூ ஆர் கோடு வரும், அதை பயணம் முடிந்து வெளியே செல்லும் போது ஸ்கேன் செய்து வெளியேறலாம்.