PF பயனர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! அதிக ஓய்வூதியம் பெற வேண்டுமா உடனே விண்ணப்பியுங்கள்!
ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995 இன் கீழ் பகுதி என ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மே மூன்றாம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இந்த திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3. 2023 என கூறபட்டிருந்தது. தொழிலாளர் அமைச்சகம் தற்போதைய தொழிலாளர்கள் முதலாளிகள் சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் அத்தொகையை தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதியை மே 3 2023 வரை நீட்டிக்க மத்திய அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
மேலும் நீங்கள் இபிஎப்ஓ யூனிபெய்ட் மெம்பர்ஸ் போர்டல் வாயிலாக வரும் மே மூன்றாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள ஊழியர்கள் அருகில் உள்ள இபிடிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அப்போது இபிஎஸ்க்கு ஒவ்வொரு மாதமும் ரூ 55 ஆயிரம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களின் அடிப்படை சம்பளம் 50 ஆயிரம் ஆக இருப்பின் 15 ஆயிரம் சம்பளத்தின் அடிப்படையில் உங்களது இபிஎஸ் பங்களிப்பு 1250 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.