பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! ஞாயிற்றுக்கிழமை வரும் விடுமுறையை திங்கள்கிழமை மாற்றிய தமிழக அரசு!!
செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறை தேதியை தமிழக அரசு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி திகழ்கிறது. ஆவணி மாதம் சதுர்த்தி அன்று விநாயகருக்கு கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விநாயகரின் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்த சூழ்நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 18 நாட்கள் உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறை செப்டம்பர் 17-ஆம் தேதியில் இருந்து 18-ஆம் (திங்கள் கிழமை) தேதிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி விநாயகர் சதுர்த்தியானது வருகின்ற செப்டம்பர் 18-ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் என்று இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு பல்வேறு கோவில்களில் உள்ள தலைமை தெரிவித்து இருப்பதால் அதன்படியே அன்றைய தினமே பொது விடுமுறை என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
செப்டம்பர் 17, 2023 அன்று விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை நாளாக 1881 ஆம் ஆண்டு பேச்சு வார்த்தையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்து சமய அறநிலை துறை ஆணையர் பல்வேறு கோவில் தலைவர்களின் அறிக்கையை முன்னிறுத்தி விநாயகர் சதுர்த்தி 17.09.2023 ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக 18.09.2023 அன்று திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த அறிக்கையை பரிசளித்த அரசு 1881 பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட சட்டத்தின் கீழ் 17.09.2023 முதல் 18.09.2023 வரை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொது விடுமுறையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதன்படியே இந்த அறிவிப்பு 01.09.2023 அன்று வெளியிடப்படும் கூடுதல் அரசாணையில் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.