ரேசன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! அமைச்சசர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிடுவார். என அமைச்சர் சக்கரபாணி கூறினார். மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செரிவுட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வெட்டி, சேலை, பணம் அத்துடன் பொங்கல் வைக்கத் தேவையான அரிசி, வெல்லம், மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் பணமும் வழங்குவது குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் பொங்கல் பரிசு குறித்து அமைச்சரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் கூறிய அவர் சென்ற ஆண்டு என்ன பொருட்கள் வழங்கப்பட்டது.எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என கூறினார்.
மேலும் அவர் மக்களுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. எனவே முதல்வர் ஆணைப்படி நியாய விலை கடைகளில் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும். இது இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் அடங்கியது.100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறினார்.
அமைச்சரின் இந்த செய்தியால் குடும்ப அட்டைதாரர்கள் டபுள் குட் நியூஸ் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.