பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு!

0
163

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இவர்களுக்கு மட்டும் அரையாண்டு விடுமுறை  நாட்கள் நீட்டிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலை தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.ஆனால் கடந்த வாரம் மாண்டஸ்  புயல் காரணமாக மீண்டும் ஓரிரு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 1ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத்தேர்வு இம்மாதம் 16 ஆம்  தேதி வெள்ளிக்கிழமை முடிந்தது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி ஒன்றாம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த விடுமுறையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 1ஆம் தேதி  முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி ஜனவரி 2, 3 ,4 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றது.

 

அதனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 5ஆம் தேதி வழக்கம் போல் திறக்கப்படும்.இந்த விடுமுறை நீட்டிப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியில் தவறாமல் பங்கு பெற வேண்டும் பயிற்சிகள் இடம்பெறாத பள்ளிக்கு நேரில் சென்று இதர அலுவலக பணிகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் 6 முதல் 12-ம் வகுப்புகளான விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை அதனால் அவர்களுக்கு ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.