பட்ஜெட்டில் பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! ரூ 1500 கோடி நிதி ஒதுக்கீடு!

0
301
Happy news for schools in the budget! Rs 1500 crore allocation!

பட்ஜெட்டில் பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! ரூ 1500 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழக சட்டசபையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்து ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனையடுத்து சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இன்று மீண்டும் சட்டசபை கூடியுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை தொடங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த முறையும் அவ்வாறே தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பட்ஜெட் உரையை மடிக்கணினியை பார்த்து வாசிக்க தொடங்கினார்.

உறுப்பினர்களும் தாங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியில் பட்ஜெட் உரையை பார்த்து தெரிந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகர் மு அப்பாவு தலைமையில் அலுவலர் ஆய்வு குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கடந்த திமுக தேர்தல் அறிக்கையின்படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அது போலவே இந்த ஆண்டு வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் வரும் 19ஆம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் எண்ணும் எழுத்தும் திட்டம், புதிய வகுப்பறை கட்டுவது மற்றும்  ஆய்வகம் போன்றவைகள் கட்டுவதற்கும் 1500 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.