மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை!

0
240
Happy news for students! Regular holiday only for government schools!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு பள்ளிகளுக்கு மட்டும் தொடர் விடுமுறை!

கடந்த வாரங்களில் அதிகளவு கனமழை பெய்து வந்ததால் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.இந்நிலையில் வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான்.அந்த வகையில் தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களை கடும் குளிர் நிலவி வருகின்றது.

இன்று நான்காவது நாளாக கடும் குளிர் அலையை எதிர்கொண்டு வருகிறது.டெல்லி நகரின் மையப்பகுதிகளில் இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக இரண்டு டிகிரியாக வெப்பநிலை பதிவானது.அதிகளவு பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகினார்கள்.மேலும் பனி மூட்டம் காரணமாக டெல்லிக்கு 100 விமானங்கள், 43 ரயில்கள் தாமதமாக வந்தடைந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களில் அதிகளவு குளிர் மற்றும் கடும் பனி மூட்டம் இருப்பதினால் அந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் ராஜஸ்தான்,பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.காலை நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

அதனால் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகள் விடுமுறைக்கு பின்  செயல்பட இருந்தது ஆனால் 2 டிகிரிக்கு குறைவாக எலும்பை உறைய வைக்கும் அளவுக்கு குளிரின் தாக்கம் அதிகரிப்பதினால் தனியார் பள்ளிகளும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற குளிர் அலை காரணமாக ஜார்கண்ட் மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 14 தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு சில மாநிலங்களில் கடும் பனி நிலவி வருவதினால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.