ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

0
123
Happy news for those going to Sri Rangam by train!! Henceforth this train will stop there!!

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

ரயில் மூலம் ஸ்ரீரங்கம் செல்வோருக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி வைகை அதிவிரைவு ரயில் இனிமேல் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலமான ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் திருக்கோவில். இங்கு விஷ்ணு பகவான் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஆவணி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்து தொடங்கும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். அந்த மாதத்தில் வருகின்ற அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள்  வருகை புரிவர்.

தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர். ஆனால் சில  ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. அதிலும் குறிப்பாக வைகை அதிவிரைவு ரயிலானது இயக்கப்பட்டது முதலே ஸ்ரீரங்கம் மக்களின் நெடுநாள் கோரிக்கையாக அங்கு நின்று செல்ல வேண்டும் என  இருந்து வந்தது.

அந்தக் கோரிக்கை தற்போது தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால் நிறைவேறி உள்ளது. இதுப்பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் வைகை அதிவிரைவு ரயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இதைப் போலவே மலைக்கோட்டை விரைவு ரயிலானது கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அடுத்ததாக மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

புகலூர் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை செல்லும் அதிவிரைவு ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.