பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இனி விமான நிலையங்களில் இதற்காக காத்திருக்க வேண்டாம்!
சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு அண்மையில் எண்ணற்ற புகார் வந்த வண்ணமே இருந்தது.அந்த புகாரில் விமான நிலையங்களில் அண்மைக்காலமாக சோதனை நடவடிக்கைகளுக்கு பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றனர் என்பது தான்.அதனால் விமான நிறுவனங்களில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க கடந்த மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்லும் பொழுது அவற்றை பாதுகாப்பு சோதனைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் மிகுந்த சிரமங்களை சந்திக்க உள்ளது.ஆனால் இனி இவ்வாறான சிரமங்கள் இருக்காது.மேலும் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் இனி விமான நிலையங்களில் கம்ப்யூட்டர் டோமோகிராபி அடிப்படையில் ஸ்கேனர்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இந்த ஸ்கேனர் பயணிகள் எடுத்து செல்லும் பெட்டிகளை முப்பரிமாண முறையில் ஸ்கேன் செய்து காட்டும் என கூறப்படுகின்றது. பயணிகள் மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை சூட்கேஸ் அல்லது கைப்பையில் இருந்தோ வெளியே எடுத்து காட்டும் தேவை இருக்காது.அதனால் பயணிகளின் சிரமம் குறைய வாய்புள்ளது அதனால் நேரம் மிஞ்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.