Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்!! நடிகர் விஜயை சந்திக்க தயாராகுங்கள் !!

happy-news-for-you-students-get-ready-to-meet-actor-vijay

happy-news-for-you-students-get-ready-to-meet-actor-vijay

மாணவர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்!! நடிகர் விஜயை சந்திக்க தயாராகுங்கள் !!

நடிகர் விஜய் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அதற்கான வேலையில் உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறார் குறிப்பாக வெள்ள நிவாரண நிதி பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று உதவி புரிந்தார்.

பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மாநில அளவிலும் மற்றும் மாவட்ட அளவிலும் அதிக மதிப்பெண்ணை பெரும் மாணவ மாணவியருக்கு உதவி தொகையும் அளித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு உதவித்தொகை தருவதற்காக விஜய் முடிவு செய்துள்ளார், அதற்கான தகவலையும் வெளியிட்டுள்ளார். மேலும் 10 நாட்களுக்குள் மாணவ மாணவியர்களின் பெயர்களை தேர்வு செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பல வருடங்களாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 2024 பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தங்களது அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்து இருந்தார்.
அதற்கான வேலையிலும் கட்சி உறுப்பினர்கள் ஆர்வமாக செயல்பட தொடங்கினர்.மேலும் தங்களது கட்சியை பதிவு செய்வதற்கு விண்ணப்பமும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருந்தார்.

விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பின்பு தலைமை தேர்தல் ஆணையம் இக்கட்சியின் பதிவு குறித்து யாருக்கேனும் எதிர்ப்பு இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என தனிமை தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
மேலும் அவர்கள் அளித்த நோட்டீஸிற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் விஜய்யின் விண்ணப்பத்திற்கு பெயர் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு கட்சியின்பெயர் பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் அளித்து வரும் உதவிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

Exit mobile version