தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வருகிற ஏப்ரல் 1 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அனைவருக்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய ஓய்வூதிய திட்டம் :-
சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த ஓய்வூதிய திட்டத்தில் பெறப்படக்கூடிய பணமானது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளை பொறுத்து மாறக்கூடியது.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் :-
இந்த திட்டத்தின் மூலம் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்குவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
ஒருமுறை தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வு ஊதிய திட்டத்திற்கு ஒரு நபர் மாற்றிக் கொண்டால் மீண்டும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே தேசிய ஓய் ஊதிய திட்டத்தில் இருக்கக்கூடிய ஒருவர் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாற நினைக்கும் பொழுது இதனுடைய திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு மாறுவது நன்மை பயக்கும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான சூத்திர கணக்கு :-
ஊதியம் = 50% X (கடந்த 12 மாத அடிப்படை ஊதியத்தின் கூட்டுத்தொகை / 12)
இந்த கணக்கானது 25 ஆண்டுகள் பணிபுரியக்கூடியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதற்கு கீழாக அதாவது 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரியக்கூடியவர்களுக்கு இதனுடைய வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.