Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பயணிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! இந்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! 

Happy news released by Tamil Nadu government for travelers!! Special buses run on these days!!

Happy news released by Tamil Nadu government for travelers!! Special buses run on these days!!

பயணிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! இந்த நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு 1250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் எப்போதும் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். வெளியூரில் வேலை செய்யும் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இவ்வாறு ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசின் போக்குவரத்து கழகம் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. மேலும் இந்த சிறப்பு பேருந்துகள் எப்போதும் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முகூர்த்த நேரம் மற்றும் வார இறுதி நாட்கள் வருவதால் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக சுப முகூர்த்த நாட்களை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 1250 பேருந்துகள் போக்குவரத்தால் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள் திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை, பெங்களூரு, உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. இதில் தினசரி ஓடும் பேருந்துகளுடன்  இன்று 500 பேருந்துகளும்,  நாளை மறுநாள் 350 பேருந்துகளும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப அனைத்து இடங்களிலிருந்தும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொலைதூரம் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே பதிவு செய்து திட்டமிட வேண்டும் என போக்குவரத்துக் கழகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version