தமிழ்நாட்டில் நோய்த்தொற்றுப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறையவில்லை. அதன் காரணமாக, மே மாதம் 23ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த சூழலில் மே மாதம் 31-ஆம் தேதி வரையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு சார்பாக தமிழக அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதில் மிக பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் அவசர மருத்துவ காரணங்களுக்காகவும், இறப்பு காரணங்களுக்காகவும், மட்டும்தான் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பலனாக கடந்த மூன்று தினங்களாக நோய் தொற்று பாதிப்பு சன்னமாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் இரண்டாம் கட்ட அலையில் இருந்து ஓரிரு வாரங்களில் மீண்டு விடலாம் என்று தமிழக அரசு சார்பாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலன் கொடுத்து வருவதாகவும், அதோடு தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது.