அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 20 லட்சம்!
கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் எங்கும் கிராம சபை மற்றும் பகுதி சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர், அங்கிருந்த மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
காவிரி ஆற்றின் நீரை திண்டுக்கல் முழுவதும் உள்ள வாய்க்கால்கள் மற்றும் குழாய்களில் நிரப்புவதற்கான கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளதாக தெரிவித்தார். அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பணி அனைத்தும் நடைபெற்று முடிந்துவிடும் என தெரிவித்தார். அதேபோல திண்டுக்கல்லில் எந்தெந்த வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமையவில்லையோ அங்கெல்லாம் பாதாள சாக்கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு கொரோனா வந்தடைந்ததை காரணத்தை கூறி தற்பொழுது வரை நிதி அளிக்கவில்லை. மத்திய அரசு நிதி அளித்தவுடன், ஒவ்வொரு வார்டுக்கும் தேவையான பணிகள் அனைத்தும் செய்து தரப்படும் எனக் கூறினார். அமைச்சர், மேயர் என அனைவரும் உங்களுக்காக வேலை செய்ய தான் உள்ளோம். அதற்காக தான் நீங்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கூறினார். அதேபோல வரும் நாட்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அங்குள்ள மக்கள் சில பகுதிகளில் சாலை வசதி செய்து தரக்கோரியும், தெருவிளக்குகள் அமைத்து தரக் கோரியும் கேட்டனர். ஒவ்வொரு வார்டு சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.