Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலியல் பலாத்கார சம்பவங்கள், உச்ச நீதி மன்றம் முக்கிய முடிவு?

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் பலாத்கார சம்பவங்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை செய்தல், ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.

குறிப்பாக, சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதில் சம்பந்தப்பட்ட 4 பேர், போலீசுடன் நடந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய வெறுப்பையே இவை பிரதிபலிக்கின்றன.

இந்த அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நிர்வாகரீதியான முக்கிய முடிவு ஒன்றை நேற்று எடுத்தார்.

அதாவது, நாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்தவும், கண்காணிக்கவும் 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அவர் அமைத்தார். நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகள் மூலமாக கற்பழிப்பு வழக்கு விசாரணையை கண்காணித்து வருவார்கள். மேலும், குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழக்கை முடித்து வைக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.

Exit mobile version