Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து

“சினிமாட்டிக் யூனிவர்ஸ் கதைகளில் உடன்பாடு இல்லை..” பிரபல ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் கருத்து

சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஏற்கனவே ஹிட்டான கைதி திரைப்படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  சமீபத்தைய அவரின் விக்ரம் திரைப்படத்தின் ஹிட்டால் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்துள்ளன.. இவர் இயற்றிய மாநகரம், கைதி, விக்ரம் போன்ற படங்கள் அனைத்தும் ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு நல்ல பிரியாணி விருந்தாக அமைந்தன.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது திரைப்படமான விக்ரம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியுள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 170 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இதுவரை எந்தவொரு படமும் தமிழ்நாட்டில் இவ்வளவு வசூல் செய்தது இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றியில் முக்கியமானக் காரணங்களில் ஒன்றாக அவரின் முந்தைய படமான ‘கைதி’ படத்தின் சில கதாபாத்திரங்களும் கிராஸ் ஓவர் செய்திருந்தார். அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும் இதை ரசிகர்கள் ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்று கூறி கொண்டாடி வருகின்றனர். தனது அடுத்தடுத்த படங்களிலும் இந்த யூனிவர்ஸ் தொடரும் என லோகேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுபோல சாமி மற்றும் சிங்கம் கதாபாத்திரங்களை கிராஸ் ஓவர் செய்து ஒரு படத்தை இயக்கும் எண்ணம் உண்டா எனக் கேட்ட போது, அவர் “எனக்கு அதுபோன்ற கதைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ரசிகர்கள் படம் பார்க்க உட்கார்ந்துவிட்டால் அந்த உலகத்துக்குப் போய்விடவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version