Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி: ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2-வது முறையாக தேர்வு!

மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2 வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவையின் துணைத் தலைவரைத் தேர்வு செய்ய இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த பதவிக்கு எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் பாஜக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜா வேட்பாளராக நிறுத்தினர்.

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எம்.பி. ஹரிவன்ஸை நாராயணன் சிங்கை தேர்வு செய்ய வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஜெ.பி. நட்டா முன்மொழிந்ததை அடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில் எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2 வது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

பிரதமர் மோடி, காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. குலாம் நபி ஆசாத் ஆகியோர் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நாராயணன் சிங்கிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version