செயின் போட்டு கழுத்து பகுதி கருப்பாகி விட்டதா? கவலையை விடுங்க.. இந்த திரவத்தில் தீர்வு உண்டு!!

0
69
Has the chain turned black on the neck? Don't worry.. this liquid has the solution!!

உங்களில் சிலருக்கு கழுத்து பகுதி கருமையாக இருக்கும்.குறிப்பாக பெண்களின் கழுத்துப் பகுதி அதிகளவு கருமையாகிறது.செயின் அணிவது சிலருக்கு அலர்ஜியாகி கழுத்தை கருப்பாகி விடுகிறது.

சிலருக்கு அதிகளவு எண்ணெய் படிவதாலும்,கழுத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறுவதாலும் கருமையாகிறது.இந்த கழுத்து கருமையை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் போக்கிவிடலாம்.

*பூவரசுக் காய்

கழுத்தில் செயின் அணிவதால் சிலருக்கு அவ்விடம் கருமையாக மாறிவிடுகிறது.சிலருக்கு அரிப்பு,எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க பூவரசுக் காயை பயன்படுத்தலாம்.

பூவரசுக் காயை தரையில் வைத்து உரசினால் ஒரு திரவம் வெளியேறும்.இந்த காயை அரைத்தாலும் திரவம் கிடைக்கும்.இதை கழுத்தை சுற்றி பூசி நன்கு காயவிட வேண்டும்.

பிறகு வெது வெதுப்பான நீரில் காட்டன் துணியை நினைத்து கழுத்தை சுற்றி துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்தால் கழுத்து கருமை நீங்கிவிடும்.

பூவரசு காயை அரைத்து தேமல்,படர் தாமரை,சொறி சிரங்கு மீது பூசினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

*கற்றாழை ஜெல் மற்றும் சர்க்கரை

கழுத்து பகுதியில் ஏற்பட்ட கருமையை போக்க கற்றாழை மற்றும் சர்க்கரை உதவுகிறது.இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து ஸ்கரப் செய்யுங்கள்.இவ்வாறு செய்தால் கழுத்து கருமை நீங்கிவிடும்.

*பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா அதாவது சமையல் சோடா சேர்த்துக் கொள்ளவும்,பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கழுத்தை சுற்றி அப்ளை செய்தால் கருமை நீங்கிவிடும்.தோல் அரிப்பு,எரிச்சலும் இதனால் சரியாகும்.