பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா கொரோனா தடுப்பூசி?

0
98
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
இந்த நிலையில் ஸ்புட்னிக்-v தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டதாக ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கோவிட் 19-க்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் -V வின் முதல் தொகுப்பு சிவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. தேவையான தகுதி சோதனைகள் வெற்றி பெற்றதையடுத்து பொது பயன்பாட்டுக்கு  விடப்பட்டுள்ளது.  ரஷ்யாவின் பிராந்திய பகுதிகளுக்கு விரைவில் இந்த மருந்துகளின் முதல் தொகுப்பு கிடைத்துவிடும் என  தெரிவித்துள்ளது.