உங்கள் வீட்டிலுள்ள மிக்ஸி பிளேடுகளின் கூர்மை குறைந்துவிட்டதா?? இதோ அதை சார்ப்பாக்க எளிய வழி

0
112


குடும்ப தலைவிகளுக்கு இன்று இருக்கும் ஒரே தலைவலி மிக்ஸிதான்.காரணம் காலையில் எழுந்தவுடன் இரவு தூங்கும் வரையில் சட்னி அரைப்பதற்கு குழம்பிற்கு மசாலா அரைப்பது ஜூஸ் போடுவது போன்ற அடிக்கடி பயன்பாட்டிற்கு அத்தியவசியமான பொருளாக விளங்குகிறது. மிக்ஸி இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

மிக்ஸி பழுதடைந்து விட்டால் அன்று சமையலில் எவ்வாறு செய்வது என்று டென்சன் ஆகும் அளவிற்கு மிக்ஸி இன்றியமையாததாகிவிட்டது. இவ்வாறு அடிக்கடி பயன்படுத்தப்படும் மிக்ஸி எளிதில் பழுதடைந்து விடுகிறது அல்லது அதன் பிளேடுகள் கூர்மையை இழந்துவிடுகின்றன.இந்த மிக்ஸியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க சில டிப்ஸ்கள் உள்ளது அதைப்பற்றி இப்பதிவில் காண்போம்.

நேரமின்மையால் பெண்கள் மிக்ஸியில் அரைக்கும் பொழுது சீக்கிரமாக ஆராயப்பட வேண்டும் என்று எடுத்தவுடன் மூன்றாவது வேகத்தில் வைத்து அரைப்பர்.இப்படி செய்வதன் மூலம் மிக்ஸி சடன் ஸ்பீடை அடைவதால் அதன் காயில் போவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன.எனவே கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டி அரைக்கவேண்டும்.

எந்த நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்தப்படும் மிக்ஸி கரண்ட் சப்ளை குறைவாக உள்ள நேரத்தில் ஒருபொழுதும் மிக்ஸியை பயன்படுத்தக்கூடாது இதுவும் மிக்ஸியின் மோட்டாருக்கு கேடுவிளைவிக்கும்.

மிக்ஸியில் அரைப்பதற்கு மிக்ஸி கப்பை பொருத்தும்போது கப்ளர் நன்றாக மிக்ஸியில் பொருந்தி இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.கவனக்குறைவால் அது நன்றாக பொருந்தவில்லை என்றால் அந்த கப்லர் உடைந்துவிடும்.

எப்பொழுதும் அரைக்கும்போது மிக்ஸி ஜார் நிறைய போட்டு அரைக்கக்கூடாது அப்படி அரைக்கும் பொழுது பிளேடுகள் உடைந்துவிடும் அல்லது கூர்மையை இழந்துவிடும் எனவே கப்பிற்கு அரை அல்லது முக்கால் பகுதி அளவு மட்டுமே போட்டு அரைக்கவேண்டும்.

மிக்ஸியில் அரைக்க தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் சிறிது இடைவெளி விட்டு விட்டு பயன்படுத்த வேண்டும் ஏனெனில் தொடர்ந்து மிக்ஸி பயன்படுத்தும் பொழுது சூடாகிவிடும்.மீண்டும் அந்தச் சூட்டிலேயே அரைக்க அரைக்க காயில் பழுதாகிவிடும்.

உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸி பிளேடுகள் கூர்மை இழந்து விட்டதா ?

அதனை சரிசெய்ய சிறிது முட்டை ஓட்டை எடுத்து மிக்ஸியில் போட்டு அதை நன்றாக அறைய விடும் போது உங்கள் பிளேடு கூர்மையாகும் .

அப்படி இல்லை என்றால் சிறிது கல் உப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அறையை விடும்போது பிளேடுகள் கூர்மையாகும்.

மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறையாவது மிக்சி கப்பின் பின்புறத்தை சோப்பினால் ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும் இது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.