இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்!

0
140

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்!

துக்ளக் விழாவில் பேசி சர்ச்சையைக் கிளப்பிய ரஜினி அதற்கு விளக்கம் அளிக்கிறேன் என்று இன்று பேசி மீண்டும் சர்ச்சையைப் பெரிதாக்கியுள்ளார்.

துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் மன்னிப்புக் கேட்காவிட்டால் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

இதனால் இன்று தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி ‘நான் கற்பனையாக எதையும் பேசவில்லை. இந்து குழுமத்தின் ப்ரண்ட்லைன் ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியினை வைத்துதான் பேசினேன். நான் கேட்டவற்றை மற்றவர்கள் சொன்னதை வைத்துதான் பேசினேன். அதனால் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கமுடியாது என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த பேச்சில் ‘பிரண்ட்லைன் இந்து குழுமத்தைச் சேர்ந்தது என்பது தகவல் பிழையாகும். மேலும் ரஜினி சுட்டுக்காட்டிய கட்டுரை 2017 ஆம் ஆண்டு வெளியானது. ஆகவே 1971 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி அப்போது வெளியான நாளிதழ்களில் இருந்து ஆதாரம் காட்டாமல் 2017 ல் வெளியான கட்டுரையை ஆதாரம் காட்ட்வேண்டியது ஏன் உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.

இதையடுத்து ரஜினியின் இந்த பேச்சை அடுத்து திமுக மற்றும் திகவினர் எதிர்வினைகள் உக்கிரமாக ஆரம்பித்துள்ளனர். இணைய உலகத்தில் கோலோச்சும் அவர்கள் சூப்பர்ஸ்டார் அல்ல #சூப்பர்சங்கிரஜினி, #ரஜினிஒருமெண்டல் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதே சமயம் ரஜினிக்கு ஆதரவாக பாஜகவினர் பெரியாருக்கு எதிரான ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கியும் உள்ளனர். எப்படியோ பாஜகவுக்கு ஆதரவாக இறங்கிய ரஜினியின் இமேஜ் டோட்டலாக தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் விஜயகாந்த் தன் உளறல் பேச்சுகளால் சமூகவலைதளங்களில் நடத்தப்பட்டதை போல ரஜினி நடத்தப்படுவாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#ரஜினிஒருமெண்டல், #சூப்பர்சங்கிரஜினி