“ஹத்ராஸ் சீல்”! தலைவிரித்தாடும் ஜாதி வெறி! தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி! அரசியல் பின்புலம் உள்ளதா?

0
142

“ஹத்ராஸ் சீல்”! தலைவிரித்தாடும் ஜாதி வெறி! தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி! அரசியல் பின்புலம் உள்ளதா?

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னும் பகுதியை சேர்ந்த தலித் இனமான மனிஷா வால்மீகி என்னும் 20 வயது இளம்பெண்ணை,ஜாதி வெறி பிடித்த மிருகங்களால்,நாக்கு வெட்டப்பட்டு,முதுகெலும்பு உடைக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர்.
உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனிஷா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

தலித் இனத்தைச் சேர்ந்த ஒரே காரணத்திற்காக,அந்தப் பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட தராமல் காவலர்களே தகனம் செய்த கொடூரம் அரங்கேறியது.
இதுமட்டுமின்றி அந்தப் பெண் தனது மரணம் வாக்குமூலத்தில் 4 பேரால் கற்பழிக்கப்பட்டதாக கூறியும் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை மருத்துவமனையும்,காவல் துறை சார்பிலும் தற்போது வரை ஏற்க மறுக்கின்றது.

இதுமட்டுமின்றி நேற்று பெண்ணின் உறவினர்களை சந்திக்க சென்ற அரசியல் பிரமுகர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை தடுத்து நிறுத்தப்பட்டதும்,ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அங்கு பரபரப்பு எழுந்துள்ள நிலையில் உத்திரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ.பிரையன் உத்தரபிரதேசத்திற்குச் செல்ல முயன்றார்.அப்பொழுது எல்லையில் காவலர்கள் அவரை தடுக்கவே,
காவலர்களின் தடுப்பை மீறி அவர் செல்ல முயன்றார். அப்போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாக அவர் கீழே தள்ளிவிடப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஹத்ராஸ் கிராமத்திற்கே சீல் வைத்துள்ள,காவல்துறையினர் உயிரிழந்த இளம் பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரின் செல்போனையும் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு இவ்வளவு ரகசியம் காப்பது ஏன்? அந்த கிராமத்திற்கு சீல் வைக்க காரணம் என்ன? இந்தியாவில் ஜாதி அரசியல் நடக்கின்றதா? என மக்கள் சார்பிலும்,அரசியல் கட்சிகள் சார்பிலும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.