ஒரு வாரமா சளி இருமல் படுத்தி எடுக்குதா? ரிலீஃப் கிடைக்க இந்த மூலிகை டீ செய்து குடிங்க!!

0
409
Have a cold and cough for a week? Drink this herbal tea to get relief!!

குளிர்காலத்தில் சளி,இருமல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை டீ செய்து பருகுங்கள்.நிச்சயம் நோய் தொற்று அபாயம் குறையும்.

தேவையான பொருட்கள்:

1)அஸ்வகந்தா
2)தேன்
3)டீ தூள்
4)தண்ணீர்

செய்முறை விளக்கம்:

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி,அரை தேக்கரண்டி டீ தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்கவும்.இந்த மூலிகை டீ சளி,இருமலை போக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

1)அதிமதுரம்
2)தேன்
3)இஞ்சி
4)தண்ணீர்

செய்முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அதிமதுரப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.தேவைப்பட்டால் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த டீ நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு இனிப்பு சுவைக்காக சிறிது தேன் சேர்த்து பருகினால் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)மஞ்சள்
2)இலவங்கப்பட்டை
3)புதினா இலை
4)தேன்
5)தண்ணீர்

செய்முறை:

பாத்திரம் ஒன்றில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஐந்து புதினா இலைகள்,ஒரு துண்டு இலவங்கப்பட்டை மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.இந்த டீயை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து பருகினால் சளி,இருமல் குணமாகும்.