ஒரு கப் கோதுமை மாவு இருக்கா? சுலபமாக செய்யலாம் திருநெல்வேலி அல்வா!
ஒரு கப் கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் சலித்து எடுத்துக் கொள்ளவும். அதே கப் அளவில் 5 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து பின் அதில் மீதம் உள்ள 4 கப் தண்ணீரை ஊற்றவும். 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு ஒரு சிறிய கடாயில் அதே கப் அளவில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும். பின் கேரமல் பதம் வந்ததும் இறக்கி விடவும். அதே கப் அளவில் 1/2 கப் நெய் எடுத்து கொண்டு ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும். பின் அதே கடாயில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவை சேர்த்து கை விடாமல் கிளறவும். மாவு சிறிது கட்டி ஆக ஆரம்பம் ஆகும் போது அதே கப் அளவில் 2 கப் சர்க்கரையை சேர்த்து கை விடாமல் கிளறவும். பின்பு செய்து வைத்துள்ள கேரமல்- ஐ சேர்த்து கை விடாமல் கிளரவும். பின்பு அல்வா கட்டி ஆகா ஆரம்பம் ஆனதும் கொஞ்சம் நெய் சேர்த்து கிளறவும். சிறிது கிளறியதும் மீண்டும் நெய் சேர்த்து கிளறவும். இவ்வாறே மீண்டும் மீண்டும் நெய் சேர்த்து கிளறவும். அல்வா கெட்டி ஆக கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் வரையில் கிளறவும். பின்பு வறுத்து வைத்த முந்திரி சேர்த்து இறக்கவும். சுவையான இயற்கை நிறம் கொண்ட திருநெல்வேலி அல்வா தயார்.