இந்த வெயிலுக்கு வெள்ளரி மோர் சர்பத் சாப்பிடுங்கள்!! உடலை குளு குளுன்னு மாற்றுங்கள்!!

0
231
Have cucumber buttermilk sorbet this summer!! Change the body to Glu Glu!!

இந்த வெயிலுக்கு வெள்ளரி மோர் சர்பத் சாப்பிடுங்கள்!! உடலை குளு குளுன்னு மாற்றுங்கள்!!

கொளுத்தும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து அதிக தாகம் எடுக்க ஆரம்பிக்கிறது.இதனால் உடலை குளுமையாக்க குளிர் பானங்களை விரும்பி பருகுகின்றோம்.இதில் செயற்கை சுவை சேர்க்கப்பட்டிருப்தால் குடிப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று குழந்தைகள்,பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.

ஆனால் இது போன்ற குளிர் பானங்களால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என்பதை பலரும் அறிவதில்லை.சில சமயம் அவை நம் உயிருக்கு அப்பதான விளைவை ஏற்படுத்தி விடுகிறது.எனவே கோடை வெயிலில் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வெள்ளை மோர் சர்பத் செய்து குடியுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரி
2)தயிர்
3)பச்சை மிளகாய்
4)உப்பு
5)இஞ்சி
6)ஐஸ் வாட்டர்

செய்முறை:-

ஒரு முழு வெள்ளரிக்காயை நீரில் போட்டு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கிய வெள்ளரி துண்டுகளை போட்டுக் கொள்ளவும்.பின்னர் ஒரு கப் தயிர்,நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டு மைய்ய அரைக்கவும்.

அதன் பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது ஐஸ் வாட்டர் சேர்த்து ஒரு சுத்து விடவும்.இவ்வாறு செய்தால் குளுமையான வெள்ளரி மோர் சர்பத் குடிப்பதற்கு சுவையாக இருக்கும்.

அதேபோல் இந்த சர்பத்தில் விதை நீக்கப்பட்ட தர்பூசணி துண்டுகளை சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.