ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் 14.4 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது. பிடிபட்ட முதலை, முதலைப் பண்ணைக்கு அனுப்பப்படும். அங்கு இனப்பெருக்கத்திற்கு அதன் பங்கை அளிக்கும். கடல்வாழ் முதலை, முதலை வகைகளிலேயே ஆகப் பெரியது. ஆண் முதலைகள் 7 மீட்டர் நீளம் வரை வளரலாம், 997.9 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கலாம். அவை கரையோரங்களில் வாழும். தற்போது, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் சுமார் 100,000 கடல்வாழ் முதலைகள் இருப்பாதாக அரசாங்கம் தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு, மொத்தம் 167 கடல்வாழ் முதலைகள் பிடிபட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் இத்தனை முதலைகள் பிடிபட்டதா?
