உலகம் முழுவதும் இத்தனை பேர் குணமடைந்தார்களா?

0
111

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன.

குறிப்பாக அமெரிக்காவும், பிரேசிலும் கொரோனா வைரசால் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதலிடத்தில் உள்ளது இதற்கு  அடுத்த இடத்தில்  பிரேசில் உள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது.  மேலும் பலியானவர்களின்  எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டியது. அதேபோல  உலகம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியை தாண்டியுள்ளது.