Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை!

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை!

இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை பணியாளர்கள்.  கொரோனா  ஊரடங்கின்  போதும் தூய்மைப்  பணியாளர்களுக்கு ஓய்வே இல்லை. அதனால் அவர்கள் சில கோரிக்கைகள் விடுத்துள்ளனர். கோரிக்கையில் தூய்மைப் பணியாளர் மற்றும் குடிநீர் பணியாளர் மற்றும் டிரைவர்கள் ஆகியோருக்கு கழிவறை மற்றும் குளியலறையுடன் கூடிய  ஒய்வு அறை ஒன்றை அமைத்து தருமாறு ஈரோடு மாவட்டம்  தூய்மைப் பணியாளர் சங்கம் மாநகராட்சி ஆணையர்யிடம்  கோரிக்கை விடுத்ததுள்ளனர். மேலும் கொரோனா பரவலின் போது சிறப்புச் சலுகையாக அதிக ஊதியம் வழங்க வேண்டுமெனவும் மனு அளித்தனர்.

Exit mobile version