Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!!

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.

அமைதியான கொலையாளி என்று கூறப்படும். மாரடைப்பு குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கும் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது.

மாரடைப்பு என்பது இரத்தத்தில் தேவையான ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகும். இதயத்திற்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் தமனி தடுக்கப்படும் பொழுது இவை நிகழ்கிறது. மாரடைப்பு பாலின வேறுபாடு இல்லை என்றாலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே சிறு வேறுபட்ட மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆண்களுக்கு மூச்சு திணறல் தாடை மற்றும் தோள்பட்டை வலி ஆகியவை மாரடைப்பை அறிகுறி ஆகும்.பெண்களுக்கு குமட்டல், வியர்வை, வாந்தி, தலைசுற்றல், தொண்டை வயிற்று மற்றும் முதுகில் வலி ஆகியவை மாரடைப்பு அறிகுறி ஆகும்.

மாரடைப்பு வருவதற்கான மிகவும் பொதுவான அறிகுறிகள் சோர்வு மற்றும் தூக்கமின்மை ஆகியவை அடங்கும். பெரும்பாலான ஆண்களுக்கு மார்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவை மாரடைப்பு அறிகுறி ஆகும்.

மாரடைப்பு வருவதற்கான காரணம் புகைப்பிடித்தல், மது அருந்துதல் தவறான உணவு முறை மற்றும் உடல் செயல்பாடு இன்மை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்களின் நேரடி அல்லது மறைமுக விளைவு ஆகும்.

மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம் ,உயர் கொழுப்பு நீரிழிவு உடல் பருமன் மற்றும் பிற ரத்த நாள பிரச்சனைகள் போன்ற நீண்ட கால சுகாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கும். இது காலப்போக்கில் உங்கள் உடலில் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைந்து விடும்.

 

Exit mobile version