Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

EMI வீடு வாங்கி உள்ளீர்களா.. இதை செய்தால் குறையும் கடன் சுமை!!

Have you bought a house on EMI.. If you do this the debt load will be reduced!!

Have you bought a house on EMI.. If you do this the debt load will be reduced!!

சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்தினர் உடைய மிகப்பெரிய கனவாக அமைகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது பலர் இஎம்ஐ மூலம் சொந்த வீடுகளை பெறுகின்றனர். எனினும் பலருக்கு அதனுடைய நீண்ட கால கடன் சுமை குறித்து பல கேள்விகளும் பயங்களும் எழுவதால் வீடு வாங்கும் அல்லது கட்டும் எண்ணம் கனவாகவே மாறிவிடுகிறது.

சொந்த வீடு வாங்குபவர்கள் வீட்டுக்கடனில் சில சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தங்களுடைய இஎம் ஐ சுமைகளை எளிதில் குறைக்க முடியும்.

2025 பட்ஜெட் தாக்கல் இன் பொழுது மத்திய அரசன் இ எம் ஐ களின் மீதான வரி விளக்கு மற்றும் வட்டி விகிதங்களை குறைத்து இருப்பது நடுத்தர வருடத்தினருடைய இஎம்ஐ இல் வீடு வாங்கும் கனவை நனவாக்குவதாக மாறி இருக்கிறது. அதன்படி, உங்களுடைய வீட்டுக் கடனில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கடனை விரைவாக திருப்பி செலுத்துவது மட்டுமல்லாது லட்சக்கணக்கில் வட்டியையும் சேமிக்க உதவுவதாகவும் அமையும்.

உதாரணத்திற்கு, நீங்கள் 40 லட்சம் வீட்டுக்கடன் பெற்றுள்ளீர்கள் என்றால் அதற்கு 20 ஆண்டுகளுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் கட்ட வேண்டும் என வைத்துக் கொள்வோம். அப்படியானால் உங்களுடைய EMI 34,713 ரூபாயாக இருக்கும். தற்பொழுது பட்ஜெட் தாக்கலில் இது குறித்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மாதாந்திர சேமிப்பில் 7,572 ரூபாய் சேமிப்பு தொகையாக மாறும் என வைத்துக் கொண்டால் இந்த சேமிப்பில் 60 சதவிகிதம் அதாவது 4500 உங்களுடைய வீட்டுக் கடனின் EMI உடன் சேர்த்து செலுத்தும் பொழுது 20 ஆண்டுகளாக இருக்கக்கூடிய கால அளவு 15 ஆண்டுகள் 2 மாதங்கள் என குறைந்துவிடும்.

இவ்வாறு கால அளவு மற்றும் EMI தொகையை அதிகரிப்பதால் வீட்டு கடனுக்கான வட்டி மொத்தம் 12.02 லட்சம் ரூபாய் சேமிக்க முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் குறுகிய கால அளவில் வீட்டுக் கடன் முடிவதோடு இலட்சக்கணக்கில் சேமிப்போம் மிஞ்சும்.

ஒரு சிலரோ இவ்வாறு வரக்கூடிய பணத்தை வீட்டுக் கடனின் வட்டி வீட்டுக் கடனின் கால அளவை குறைக்க பயன்படுத்தாமல் மியூச்சுவல் ஃபண்டில் போடுவதால் லாபம் தரும் என நினைத்து அதனை மேற்கொள்கின்றனர். மியூச்சுவல் ஃபண்டில் வரும் லாபத்தை விட மேற்கூறியபடி செய்வதால் அதிக அளவு லாபமானது ஈட்ட முடிவதோடு குறுகிய காலத்தில் வீட்டு கடனையும் அடைக்க முடியும்.

Exit mobile version