12 ம் வகுப்பு முடித்துள்ளீர்களா? மாதம் 50000 வரை வருமானம் பெறலாம்!
ஐ.ஆர்.சி.டி.சி இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் இந்திய ரயில்வே டிக்கெட் உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நீங்கள் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழியை இதில் நீங்கள் முகவராக சேரும்போது பெறலாம். நீங்கள் நல்ல பணமும் சம்பாதிக்கலாம். மேலும் நீங்கள் ரயில் பயண சேவை முகவராக சேரும்போது நல்ல கமிஷனும் உங்களுக்கு கிடைக்கும்.
இதில் முகவராக மாறுவதன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதில் உங்கள் டிக்கெட் முன்பதிவின்படி கமிஷன் முடிவு செய்யப்படும். இதன் முகவர்கள் அனைத்து வகையான ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு முன்பதிவின் மூலமும் பரிவர்த்தனை மூலமும் முகவர்கள் நிலையான கமிஷனையும் பெறுகிறார்கள்.
ஒரு முகவர் வழக்கமான வருமானம் மாதத்திற்கு 80,000 வரை பெறலாம். உங்களின் பணி மெதுவாக நடந்தாலும் குறைந்தது 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. நீங்கள் இதில் முகவராக மாற விரும்பினால், நீங்கள் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதற்காக நீங்கள் இதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும்.
இதில் முகவராக சேர முதலில் நீங்கள் ஒரு கோரிக்கை வரைவை அதாவது டி.டி தயாரிக்க வேண்டும். அந்த டிடிக்கு ஆகும் செலவு 30,000 ஆக இருக்கும். இது ஐஆர்சிடிசி என்ற பெயரில் எடுக்க வேண்டும். இதிலிருந்து நீங்கள் 20 ஆயிரம் பணத்தை திரும்பப் பெறுவீர்கள். ஆனால் இதன் உடனான ஒப்பந்தம் முடிந்ததும் இந்த பணம் திருப்பித் தரப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இது ஒவ்வொரு வருடமும் ஒப்பந்தத்தை புதுப்பித்தல் கட்டணத்தின் கணக்கில் வரும். இதன் முகவராக நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு பயிற்சி கிட் வழங்கப்படுகிறது. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு எவ்வாறு செய்யப்படுகிறது, என்பதை அறிய இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் முகவராக உங்களின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன், பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் இருக்க வேண்டும்.
முகவர் ஏசி டிக்கெட்டுகளில் 50 ரூபாய் வரையிலும், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஸ்லீப்பர் டிக்கெட்டில் 30 ரூபாய் வரையிலும் கூடுதல் கமிஷன் பெறலாம். இதைவிட அதிகமாக பெற அனுமதி அளிக்கப்படவில்லை.