நீங்கள் தொடர்ந்து 6 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லையா? மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
தொடர்ந்து 6 மாதங்களாகியும் ரேஷன் பொருட்கள் வாங்காத நபர்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 6 மாதங்களாக குடிநீர் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, ஆயில், சர்க்கரை ஆகிய பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அது மட்டுமில்லாமல் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த பொழுது கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. இந்த திட்டம் குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம் வந்தவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநிலம் விட்டு மாநிலம் வந்தவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக யாரெல்லாம் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லையோ அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதன்படி முதல் கட்டமாக மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இந்த செயல்முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அதாவது மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத நபர்களின் பெயர்கள் ரேஷன் கடைகளுக்கு வெளியே உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும். இவ்வாறு செய்த பின்னரும் அவர்கள் வரவில்லை என்றாலோ அல்லது அந்த பட்டியலை பார்த்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தகவல் தெரிவித்தும் ரேஷன் பொருட்கள் வாங்க வரவில்லை என்றாலோ அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ரேஷன் பொருட்கள் வாங்காத நபர்களின் பெயர்கள் ரேஷன் பட்டியலில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும்.
பின்னர் அவர்களுக்கு பதிலாக தகுதியான நபர்கள் அந்த ரேஷன் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் கடந்த 6 மாதங்களாக யாரெல்லாம் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்பதை கணக்கெடுக்கும்படி மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.