Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்க இன்னும் ரேஷன் கார்ட் வாங்கவில்லையா? தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

Haven't you bought a ration card yet? Good news published by Tamil Nadu government!

Haven't you bought a ration card yet? Good news published by Tamil Nadu government!

தமிழகத்தில் ரேசன் கார்டு வாங்குவதற்காக பல லட்சமக்கள் காத்து இருக்கும் நிலையில் ,ரேசன் கார்டு வாங்குவது தொடர்பாகவும் , அக் கார்டில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற அக்டோபோர் 19ம் தேதி நடைபெறும் என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 குடும்ப அட்டைகள்  (ரேசன் கார்டு) உள்ளது .  இதன் மூலம் 7 கோடியே 2 லட்சம் மக்கள் பயன் அடைகிறார்கள். நியாய விலை அங்காடிகளில்  மானிய விலையில் அரிசி , கோதுமை , சர்க்கரை,பருப்பு , பாமாயில் முதலிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசின் சலுகைகள் பெறுவதற்கும் ரேசன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இது மட்டுமல்லாமல் வெள்ள பாதிப்பு நிவாரணம் , பொங்கல்பரிசு தொகுப்பு , முதியவர்களுக்கன் ஓய்வு வூதியம்  பெற பயன்படுகிறது. மேலும் பெண்களுக்காக மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்கு கட்டாயம் ரேசன் அட்டை தேவை.

இதனால் கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் மக்கள் ரேசன் அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்தார்கள்.  இதல் முதற்கட்டமாக 1 லட்சம் நபருக்கு  ரேசன் கார்டு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக ரேசன் அட்டை வாங்குவதற்கும், அட்டையில் பெயர் மாற்றம் , சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கு உணவு வழங்கல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் , இதனால் நீண்ட காலம் காத்து இருக்க வேண்டிருக்கிறது . மேலும் இணையத்தில்  ரேசன் அட்டை பெயர் மாற்றம் , சேர்த்தல், நீக்குதல் செய்வதில் முறை கேடு நடைபெறுவதால்,இணணய சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த, ரேசன் கார்டு வாங்குவது தொடர்பாகவும் , அக் கார்டில் பெயர் சேர்த்தல் , நீக்கல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் அக்டோபோர் 19ம் தேதி சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் மூலமாக ஒரு சில நிமிடங்களில் பணிகளை முடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version