தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்!

0
174

தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்!

தேங்காய் பால் உடலுக்கு நன்மையா தீமையா என்பதனை இந்த பதிவு மூலம் விரிவாக காணலாம்.நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்து உட்கொள்கிறோம். இதை நம் உடலுக்கு நன்மை அளிக்குமா அல்லது தீமை அளிக்குமா என்பதற்கு பலரும் குழப்பமாக உள்ளது.

நம் முன்னோர்கள் தினசரி சாப்பிட கூடிய உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து உட்கொண்டனர். அதற்கு காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்புகள் ஆகும்.

நம் உடலில் மேகனீசு குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே தேங்காய் பாலில் அதிகப்படியான மேக்னசை நிறைந்துள்ளது. காய்கறி வகைகளான அவரை, நட்ஸ் போன்ற பொருட்களில் மேக்னீசு சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

தேங்காய் பாலில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது இதை நம் உடம்பில் உள்ள எலும்புகளை வலுவாக உதவுகிறது. எனவே பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்த தேங்காய் மற்றும் தேங்காய் பாலில் உட்கொள்ளும் பொழுது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

தற்போது உள்ள சூழலில் இரும்புச் சத்து குறைபாடு பலருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது இரும்புச்சத்து குறைவதன் காரணமாக நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இதன் விளைவாக அனிமியா ஏற்படுகிறது. அணுமியாவில் இருந்து விடுபட தேங்காய் பாலினை இது தினசரி எடுத்துக் கொண்டால் இது போன்ற பிரச்சனைகளை இருந்து விடுபடலாம்.

ஒரு கப் தேங்காய் பாலில் அன்றாடம் நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் 25 சதவீதம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பலருக்கும் தசை பிடிப்பு ஏற்படும் இதனை தவிர்க்க தினசரி உட்கொள்ளும் உணவுகளுடன் தேங்காய் பாலினை பருகி வந்தால் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.